'வரலாம் வரலாம் வா வரலாம் வா பைரவா' - ஜுனியர் ஹாக்கி, அரை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்திய அணி , பெல்ஜியம் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில் இந்திய அணியும் பெல்ஜியம் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், 21-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து இந்திய அணி முன்னிலை பெற்றது.
பெல்ஜியம் அணி இறுதி வரை போராடியும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, எதிரணியின் கோல் வாய்ப்புகளை தகர்த்தனர்.
முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்து அரையிறுதியில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை நாளை எதிர்கொள்கிறது.