தங்கம் விலையில் அதிரடி சரிவு! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

Silver Gold
By Vinoja Jun 30, 2026 05:52 AM GMT
Report

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.  இன்றைய (ஜூன் 30) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை கணிசமாகக் குறைந்து நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை அளித்தது.

தங்கம் விலையில் அதிரடி சரிவு! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? | June 30Th 2026 Gold And Silver Price In Chennai

அதன்பின் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த ஜூன் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கம் விலையில் குறைவு பதிவானது.

அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,300க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம்

தங்கம் விலையில் அதிரடி சரிவு! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? | June 30Th 2026 Gold And Silver Price In Chennai

இந்நிலையில், இன்றும் (ஜூன் 30) தங்கம் விலை மேலும் அதிரடியாகக் குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.10,900க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.87,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் அதிரடி சரிவு! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? | June 30Th 2026 Gold And Silver Price In Chennai

வெள்ளி விலையிலும் இன்று சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.