தங்கம் வாங்க திட்டமா? இன்றைய வெள்ளி விலை நிலவரம் இதோ
இன்றைய (ஜூன் 22) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை கணிசமாக குறைந்திருந்தது. இதனால் தங்க நகைகள் வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன் பின்னர் சில நாட்களில் விலையில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டாலும், தற்போது விலை நிலைத்தன்மையுடன் காணப்படுகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம் (ஜூன் 20) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600 ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,800 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று (ஜூன் 22) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே தொடர்கிறது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,600க்கும், ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,370க்கும், ஒரு சவரன் ரூ.90,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனுடன், வெள்ளி விலையும் இன்று மாற்றமின்றி நிலைத்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.255க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாததால், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோர் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.