மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Silver Gold
By Vinoja Jun 20, 2026 06:43 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை பொதுமக்கள் மற்றும் நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

தங்கம் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | June 20Th 2026 Gold And Silver Price In Chennai

அந்த வகையில், இன்றைய (ஜூன் 20) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து அந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை கணிசமாக குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன. நேற்று (ஜூன் 19) 22 காரட் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.380 குறைந்து ரூ.13,570 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | June 20Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (ஜூன் 20) தங்கம் விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,600 ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,08,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.11,370 ஆகவும், ஒரு சவரன் ரூ.160 உயர்ந்து ரூ.90,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | June 20Th 2026 Gold And Silver Price In Chennai

ஒரு கிராம் வெள்ளி ரூ.255 என்ற நிலையிலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000 என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.