கடவுளிடம் பிரார்த்தனை! 17வது மாடியில் இருந்து குதித்த தொழிலதிபர்
மகாராஷ்டிராவில் பிரபல தொழிலதிபர் 17வது மாடியில் இருந்து குதித்து தன்உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த சுனில் மோதிலால் சந்தரகனி, முல்தானி என்ற பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.
விஜய்பூர் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு வந்த சந்தரகனி, 17 வது மாடிக்கு சென்றார்.

அங்கு மொட்டை மாடியில் நின்றபடி கைகூப்பி வணங்கி கொண்டே இருந்துள்ளார். இதனை அவதானித்த காவலாளி கீழே வருமாறு அழைத்து வந்துள்ளார்.
இருவரும் 10வது மாடிக்கு வந்த போது, கார் சாவியை மறந்துவைத்து விட்டதாக கூறி மறுபடியும் 17வது மாடிக்கு சென்ற சந்தர்கனி அங்கிருந்து கீழே குதித்தார்.
பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பு பிரார்த்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
The tragic death of Solapur businessman Sunil Sadarangani after jumping from a high-rise has shocked the city. Police are probing the incident, examining CCTV footage, as questions remain over the stress that led to the fatal step.#Solapur #MultaniBakery #Suicide #ViralVideo pic.twitter.com/4p2KnE0Hlj
— Ashmita Chhabria (@ChhabriaAshmita) February 6, 2026