4 நாட்களில் ரூ.3,840 சரிந்த தங்க விலை.. இன்றைய நிலவரம் என்ன?
ஜூன் மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, ஜூலை தொடக்கம் முதலே தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக காலை, மாலை என இரு வேளைகளிலும் விலை குறைக்கப்பட்டதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று (ஜூலை 8) மட்டும் 22 காரட் தங்கம் விலை இரண்டு கட்டங்களாக குறைந்தது. காலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.13,330 ஆகவும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,06,640 ஆகவும் விற்பனையானது.
பின்னர் மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.130 மற்றும் சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200க்கும், ஒரு சவரன் ரூ.1,05,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று (ஜூலை 9) 22 காரட் தங்கம் விலை மேலும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13,170 ஆகவும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,040க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.88,320க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,840 வரை குறைந்துள்ளது. சமீபத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.16 ஆயிரம் வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது அதன் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
அதிரும் ஈரான்! அணுமின் நிலையப் பகுதியில் அடுத்தடுத்து பலத்த வெடிச்சத்தங்கள் - அமெரிக்கா தீவிர தாக்குதல் IBC Tamil