அதிரடியாக சரிந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் இதோ!
இன்றைய (ஜூலை 7) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம். கடந்த ஜூன் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
ஆனால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் கணிசமான சரிவு பதிவாகி வருவதால், நகை பிரியர்கள் மட்டுமின்றி முதலீட்டாளர்களும் விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ஜூலை மாதத்தின் முதல் நாளிலிருந்தே தங்கம் விலை கணிசமாக குறையத் தொடங்கியது. மேலும், கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் தங்கம் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.
அந்த வகையில், வாரத்தின் தொடக்கமான நேற்று (ஜூலை 6) 22 காரட் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. அதன்படி, ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.13,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 குறைந்து ரூ.1,08,480-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்
இந்த நிலையில், இன்றும் (ஜூலை 7) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.13,400-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,280 குறைந்து ரூ.1,07,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.11,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.89,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்! IBC Tamil