மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு!

Silver Gold
By Vinoja Jul 03, 2026 05:59 AM GMT
Report

கடந்த ஜூன் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. இதையடுத்து, ஜூலை மாதத்தின் முதல் நாளில் தங்கம் விலை கணிசமாக குறைந்ததால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. 

ஆனால் அதன்பிறகு கடந்த மூன்று நாட்களாக காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு! | July 3Rd 2026 Gold And Silver Price In Chennai

நேற்றைய (ஜூலை 2) மாலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,550க்கும் விற்பனை செய்யப்பட்டது.அதேபோல், ஒரு சவரன் விலை ரூ.1,200 உயர்ந்து ரூ.1,08,400 ஆக இருந்தது.

இன்றைய நிலவரம்

இந்த நிலையில், இன்று (ஜூலை 3) மீண்டும் தங்கம் விலை உயர்வை பதிவு செய்துள்ளது.அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,200 அதிகரித்து ரூ.1,09,600 ஆக உயர்ந்துள்ளது.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு! | July 3Rd 2026 Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,440க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 அதிகரிப்பு! | July 3Rd 2026 Gold And Silver Price In Chennai

தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து வருவதால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணித்து வருகின்றனர்.