சரிவுக்குப் பிறகு அதிரடி ஏற்றம் கண்ட தங்க விலை! இன்று சவரன் எவ்வளவு?
ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், இன்று (ஜூலை 30) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155 ஆகவும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.1,05,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிவலரம்
இந்நிலையில், இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,230 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,045 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.88,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.235 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000 ஆகவும் தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை நிலையாக நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.