மீண்டும் எகிறிய தங்க விலை ... இன்றைய விலை நிலவரம் இதோ!

Silver Gold
By Vinoja Jul 02, 2026 06:22 AM GMT
Report

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து தங்கம் விலையில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும்  மாற்றத்தை சந்தித்து வருகின்றது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கம் விலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 2) நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, ஜூலை மாதத்தின் முதல் நாளான நேற்று குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்தது.

மீண்டும் எகிறிய தங்க விலை ... இன்றைய விலை நிலவரம் இதோ! | July 2Nd 2026 Gold And Silver Price In Chennai

நேற்று முன்தினம் காலை மற்றும் மாலை என இரண்டு முறை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்றும் இரண்டு முறை விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் எகிறிய தங்க விலை ... இன்றைய விலை நிலவரம் இதோ! | July 2Nd 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம்

இந்த நிலையில், இன்றும் (ஜூலை 2) தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,400-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,160-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,280-க்கும் விற்பனையாகி வருகிறது.

மீண்டும் எகிறிய தங்க விலை ... இன்றைய விலை நிலவரம் இதோ! | July 2Nd 2026 Gold And Silver Price In Chennai

தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையிலும் உயர்வு பதிவாகியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் நகை வாங்குபவர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களிலும் விலை நிலவரத்தில் மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறமை குறிப்ப்பிடத்தக்கது.