மீண்டும் அதிரடியாக குறைந்தது தங்க விலை! இன்று சவரன் எவ்வளவு?
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜூலை மாத தொடக்கத்தில் இருந்தே சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பொருளாதார காரணிகளின் தாக்கம் காரணமாக தங்கத்தின் விலையில் தினமும் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில், நேற்று (ஜூலை 28) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,215-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,240 குறைந்து, ரூ.1,05,720-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் (ஜூலை 29) தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது.இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரம்
இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,155-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,970-க்கும், ஒரு சவரன் ரூ.480 குறைந்து ரூ.87,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகை வாங்க நினைப்போருக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.