தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியான உயர்வு சவரன் ரூ.1.06 லட்சத்தை கடந்தது!

Silver Gold
By Vinoja Jul 25, 2026 06:09 AM GMT
Report

ஜூலை மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன் பின்னர் சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியான உயர்வு சவரன் ரூ.1.06 லட்சத்தை கடந்தது! | July 25Th 2026 Gold And Silver Price In Chennai

இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களும், நகை வியாபாரிகளும் தினசரி விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

நேற்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டது.அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,160 குறைந்து, ரூ.1,05,840-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இன்றைய நிலவரம் 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வைக் கண்டுள்ளது.அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து, ரூ.1,06,400-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியான உயர்வு சவரன் ரூ.1.06 லட்சத்தை கடந்தது! | July 25Th 2026 Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.70 அதிகரித்து ரூ.11,115-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.88,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியான உயர்வு சவரன் ரூ.1.06 லட்சத்தை கடந்தது! | July 25Th 2026 Gold And Silver Price In Chennai

தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது மீண்டும் சரிவைச் சந்திக்குமா என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்தே அமையும் என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.