நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

Silver Gold
By Vinoja Jul 24, 2026 05:59 AM GMT
Report

இன்றைய (ஜூலை 24) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாகப் பார்க்கலாம். ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக சரிவைச் சந்தித்தது.

அதன்பிறகு சில நாட்கள் விலை ஏற்றம், இறக்கம் என மாறுபட்ட நிலையில் இருந்தது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்வை பதிவு செய்தது.

நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை! | July 24Th 2026 Gold And Silver Price In Chennai

இந்த உயர்வு காரணமாக நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் சற்று கவலையடைந்திருந்தனர். நேற்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,500 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1,08,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

ஆனால் இன்று (ஜூலை 24) நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. தங்கம் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதால், நகை வாங்குவோருக்கும் முதலீட்டாளர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை! | July 24Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,230 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,05,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.11,045 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.88,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்குவோருக்கு குட் நியூஸ்.. இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை! | July 24Th 2026 Gold And Silver Price In Chennai

இதனுடன், வெள்ளி விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.