தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்த தங்க விலை.. இன்று சவரன் எவ்வளவு?
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது மீண்டும் சரிவைச் சந்திக்குமா என்ற எதிர்பார்ப்பு நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை, அதன்பிறகு சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வுப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களும், நகை பிரியர்களும் கவலையடைந்துள்ளனர்.
நேற்றைய (ஜூலை 22) நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,430க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440 ஆக இருந்தது.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில், இன்று (ஜூலை 23) தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,500க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.11,315க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.