தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய விலை நிலவரம் இதோ!
தொடர்ச்சியாக உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை, நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்., இன்றைய (ஜூலை 22) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
ஜூலை மாத தொடக்கத்தில் தங்கம் விலை கணிசமாக சரிவைச் சந்தித்தது.அதன் பின்னர் சில நாட்கள் ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமான தங்கம், கடந்த வாரத்தில் தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது.

ஆனால் அந்த நிலை நீடிக்காமல், தற்போது தங்கம் விலை மீண்டும் உயர்வுப் பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
நேற்றைய (ஜூலை 21) நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,220-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்

இந்நிலையில், இன்று (ஜூலை 22) தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.11,245-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 உயர்ந்து ரூ.89,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.