ஜூலை தொடக்கத்திலேயே தங்கம் விலை வீழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் என்ன?

Silver Gold
By Vinoja Jul 01, 2026 06:42 AM GMT
Report

நகை பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 1)தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜூன் மாதம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை, ஜூலை மாதத்தின் முதல் நாளான இன்று குறைந்துள்ளது.

ஜூலை தொடக்கத்திலேயே தங்கம் விலை வீழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் என்ன? | July 1St 2026 Gold And Silver Price In Chennai

நேற்று தங்கம் விலை காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் மாற்றம் கண்டது. காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030 ஆகவும், சவரனுக்கு ரூ.2,160 குறைந்து ரூ.1,04,240 ஆகவும் இருந்தது.

ஆனால் மாலையில் விலை மீண்டும் உயர்ந்து கிராமுக்கு ரூ.13,200 மற்றும் சவரனுக்கு ரூ.1,05,600 ஆக விற்பனையானது.

இன்றைய நிலவரம்

இன்று 22 காரட் தங்கம் மீண்டும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100 ஆகவும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

ஜூலை தொடக்கத்திலேயே தங்கம் விலை வீழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் என்ன? | July 1St 2026 Gold And Silver Price In Chennai

18 காரட் தங்கமும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.10,940 ஆகவும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.87,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூலை தொடக்கத்திலேயே தங்கம் விலை வீழ்ச்சி - இன்றைய விலை நிலவரம் என்ன? | July 1St 2026 Gold And Silver Price In Chennai

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனையாகிறது.