தங்கம், வெள்ளி விலையில் அதிரடி வீழ்ச்சி... இன்றைய புதிய விலை இதோ!
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்கு போன்ற காரணிகள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஜூலை மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. மாதத்தின் ஆரம்பத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன்பிறகு சில நாட்கள் நிலையான போக்கில் இருந்தாலும், இடைக்கிடையே விலை மாற்றங்கள் பதிவாகி வருகின்றது.

குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
நேற்றைய (ஜூலை 16) நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,150க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூலை 17) தங்கம் விலை மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்
இதனால் நகை வாங்கத் திட்டமிட்டு இருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலயில்,இன்றைய விலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ரூ.10,920க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.87,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஹரக் கட்டா விவகாரத்தில் கைமாறிய பணம்! லஞ்ச வழக்கில் நீதிமன்றில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள் IBC Tamil