நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி!மீண்டும் அதிரடியாக குறைந்த தங்க விலை.... இன்றைய நிலவரம் என்ன?

Silver Gold
By Vinoja Jul 11, 2026 08:15 AM GMT
Report

கடந்த ஜூன் மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.அதன் பின்னர் ஜூலை மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை கணிசமாக சரிந்து, நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி!மீண்டும் அதிரடியாக குறைந்த தங்க விலை.... இன்றைய நிலவரம் என்ன? | July 11Th 2026 Gold And Silver Price In Chennai

குறிப்பாக ஜூலை 8 மற்றும் 9ஆம் தேதிகளில் காலை, மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.ஆனால் அதன்பிறகு ஜூலை 10ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் உயர்வு கண்டது.

அன்றைய தினம் 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,350க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,06,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்

இந்த நிலையில், இன்று (ஜூலை 11) மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மற்றும் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி!மீண்டும் அதிரடியாக குறைந்த தங்க விலை.... இன்றைய நிலவரம் என்ன? | July 11Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,300க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,06,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,120க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.88,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி!மீண்டும் அதிரடியாக குறைந்த தங்க விலை.... இன்றைய நிலவரம் என்ன? | July 11Th 2026 Gold And Silver Price In Chennai

இதனுடன், வெள்ளி விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.240க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.