ஜூலியை கெட்டவார்த்தை போட்டு திட்டிய நிரூப் - வலுக்கும் கண்டனங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளரை நிரூப் கெட்ட வார்த்தையால் திட்டிய நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 முடிந்த கையோடு தொடங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. வனிதா பாதியில் வெளியேறியது, கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் பின்வாங்கியது என அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே பிக்பாஸ் ஓடிடி என்பதால் சென்சார் இல்லாமல் நிகழ்ச்சி வரம்பு மீறி செல்வதாக தொடர்ந்து பார்வையாளர்கள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நடந்து வரும் லக்சரி பட்ஜெட் டாஸ்க்கின் போது நிரூப் ஜூலியை மிகவும் மோசமான கெட்ட வார்த்தையை பயன்படுத்தி ஆபாசமாக திட்டினார் என ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இப்படி நிகழ்ச்சியில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் நிரூப் பேசியது பிக்பாஸ் அல்டிமேட் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை வரும் வாரம் நிகழ்ச்சியில் சிம்பு கண்டிப்பாரா என்ற எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.