பார்த்து பேசுண்ணே: விஜய்யின் குட்டிக்கதையை விமர்சித்த பிக்பாஸ் ஜூலி

Vijay
By Fathima Feb 24, 2026 05:33 AM GMT
Report

வேலுரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பின் போது தவெக தலைவர் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்துள்ளார் பிக்பாஸ் நட்சத்திரமும் நடிகையுமான ஜூலி.

நேற்றைய சந்திப்பின் போது ஜல்லிக்கட்டு காளையை வைத்து குட்டிக்கதையொன்றை கூறியிருந்தார்.

இதை விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜூலி, இப்போதான் உங்கள் வேலூர் பிரசாரத்தை பார்த்தேன். வழக்கம்போல அதில ஒன்னுமே இல்லை.

பார்த்து பேசுண்ணே: விஜய்யின் குட்டிக்கதையை விமர்சித்த பிக்பாஸ் ஜூலி | Julie Criticizing About Vijay Short Story

கூட்டத்தில் ஒரு குட்டிக் கதை சொன்னீங்க, அதைக்கேட்டு என்னால பேசாம இருக்க முடியல, நீங்க போகுற போக்கில் ஜல்லிக்கட்டு காளை நின்றது, புல்லுக்கட்டை கொடுத்தேன் என சொல்றீங்க.

உங்க கட்சியில இருக்க பாதி பேர் மைனர், ஜல்லிக்கட்டு காளைட போயி புல்லுக்கட் கொடுத்த என்ன ஆகும்.

50, 50 ஆகவே இருக்கட்டும் 500 ஆக வேண்டாம்ன்னே, எல்லோரும் போராடி ஜல்லிக்கட்டு அனுமதி வாங்கி வச்சுருக்கோம். திரும்ப போராட தெம்பு திராணியில்லைணே என பேசியிருக்கிறார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் ஜூலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.