திமுக எவ்வளவு டெஞ்சர்னு இனிமே தான் தெரிய வரும்! எச்சரித்த பிக்பாஸ் ஜூலி

Vijay M K Stalin DMK Maria Juliana TVK
By Vinoja May 04, 2026 04:04 PM GMT
Report

தவெக 108 இடங்களில் முன்னிலை பெற்ற நிலையில் பிக் பாஸ் ஜூலி மீண்டும் தவெகவை தாக்கி காணொளி பதிவிட்டுள்ளது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போதே திமுக ஆதைரவாளரான ஜுலி தவெக கட்சியையும் அக்கட்சித் தலைவரையும் கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டு வந்தார்.

திமுக எவ்வளவு டெஞ்சர்னு இனிமே தான் தெரிய வரும்! எச்சரித்த பிக்பாஸ் ஜூலி | Julie Criticized Tvk Leader Vijay

இந்த நிலையில்,திமுக எதிர்பாராத விதமாக 73 இடங்களை மாத்திரமே பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மீண்டும் பிக்பாஸ் ஜூலி காணொளி வெளியிட்டுட்டு தவெக தலைவரை கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த காணொளியில் ஜூலி குறிப்பிடுகையில், ஜூலியை காணவில்லை என காணவில்லை போஸ்டர் எல்லாம் சமூக வலைதளங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்...

இங்க பாருங்க நான் இங்கதான் இருக்கேன் உங்களுடைய வெற்றியை பார்த்து இருக்கிறேன்.. இதற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்கள்.. ஒரு விஷயம் எனக்கு புரியல அரசியலில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் கிடையாது.

இது ரொம்பவும் நல்லா தெரிந்தவர்கள்தான் திமுகவினர். ஒரு விஷயத்திற்காக துவண்டு ஆஃப் ஆகி போய் எல்லாம் நாங்கள் உட்கார மாட்டோம்.

நாங்கள் ஜெயித்து உட்கார்ந்ததை விட எதிர்க்கட்சியில் உட்காருந்தது தான் அதிகம். இப்போ தானே நீங்கள் முதன் முறையாக வந்திருக்கிறீர்கள் எதிர்க்கட்சியாக திமுக உட்காரும் போது எவ்வளவு டேஞ்சர் என்று உங்களுக்கு இனிமேதான் புரியப்போகுது.

நாங்க சண்டை செஞ்சே பழகினவங்க.. எந்த சண்டையானாலும் நாங்க ரெடி.. வாங்க களத்துல சந்திப்போம். தமிழக அரசியல் களம் இதுக்கு மேல தான் சூடு பிடிக்க போகுது என்று கூறியுள்ளார்.