பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறும் நபர் - அதிர்ச்சியில் பார்வையாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சரியான ஸ்பேஸ் கிடைக்காமல் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை நிரூபிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் டைட்டில் வின்னராக நடிகர் ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த தொலைக்காட்சி பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சியை கையில் எடுத்தது.'
இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், ஜூலி, நிரூப், அபிராமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த வார நாமினேஷன் பிராசஸஸ் நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட்டில் எல்லோரும் பழகிய முகங்கள்தான் என்பதால் நிகழ்ச்சி தொடங்கிய அடுத்த நாளே எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 8 பேர் சிக்கியிருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வமற்ற வாக்கு கணிப்பில் 3 பேர் குறைவான வாக்குகளுடன் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நிரூப் அதிக பட்சமாக 26% வாக்குகளுடன் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து அனிதா சம்பத், சுருதி, சினேகன், அபிநய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கண்டெண்ட் ஸ்பெஷலிஸ்ட் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தி 8.27% வாக்குகளுடனும், வனிதா விஜயகுமார் 7.51% வாக்குகளுடனும், கடைசி இடத்தில் ஜூலி 6.82% வாக்குகளுடனும் உள்ளார். இதனால் இந்த வாரமே ஜூலி வெளியேறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.