“இனி எல்லாரையும் ஓட விடுறேன்” - பஞ்ச் டயலாக்குடன் களமிறங்கும் பிக்பாஸ் ஜூலி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக முன்னாள் போட்டியாளர் ஜூலி கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ராஜூ தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சி முடிவடைவதற்குள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்தன.
இதையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாவதை உறுதி செய்யும் விதமாக ப்ரோமோக்களும் வெளியாகின.
இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில் முதல் போட்டியாளராக கவிஞர் சினேகன் கலந்து கொள்வது உறுதியான நிலையில் அடுத்த போட்டியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வகையில் முதல் சீசனில் பங்கேற்று சர்ச்சைக்கு பெயர் போன ஜூலி தான் அது என தெரிய வந்துள்ளது.இதனால் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கன்டெண்டுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலியின் புரமோ டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.