ஜூஸ் குடித்த 18 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம் - மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம்
ஆரணியில் மலையாம்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குமரேசன் என்பவரின் நிலத்தில் அந்தக் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி உள்ளிட்ட 18 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்கள் களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் வாங்கி குடித்தனர். இதனையடுத்து, இன்று காலை அவர்கள் 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர்களை அங்கிருந்தவர்கள், மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்பு, அவர்கள் மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து களம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.