முடிவுக்கு வந்த இந்தியாவின் ஒரே நம்பிக்கை - ஜூடோ பிரிவில் தோல்வி

Tokyo Olympics Judoka Sushila Devi
By Petchi Avudaiappan Jul 24, 2021 10:00 AM GMT
Report

 ஜுடோ விளையாட்டில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி தோல்வி அடைந்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதனிடையே ஜுடோ போட்டிகள் இன்று காலை நடைபெற்றன.

இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சார்பில் சுஷிலா தேவி களமிறங்கி ஹங்கேரியின் எவா செர்னோ விக்கியுடன் மோதினார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹங்கேரியின் எவா செர்னோவிடம் தோல்வியடைந்து சுஷிலா தேவி சோகத்துடன் வெளியேறினார்.

இந்தியா சார்பில் ஜுடோ விளையாட்டில் கலந்து கொண்ட ஒரே வீராங்கனை சுஷிலா மட்டும் தான் என்பதால் தான் அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.