சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: கைதான திமுக MLA மகன், மருமகள் - நீதிபதி அதிரடி உத்தரவு!

Tamil nadu DMK Chennai
By Jiyath Jan 26, 2024 04:10 AM GMT
Report

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ.வின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.

சிறுமி புகார்  

பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் தன்னை கொடுமை படுத்தியதாக, அவர்களது வீட்டில் வேலைபார்த்து வந்த சிறுமி புகார் அளித்தார்.

சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: கைதான திமுக MLA மகன், மருமகள் - நீதிபதி அதிரடி உத்தரவு! | Judicial Custody To Mla Son And Sister In Law

இந்த புகாரின் பேரில் மதிவாணன்-மெர்லினா தம்பதி மீது எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ

தம்பதி கைது 

தனால் தலைமறைவான தம்பதியை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கு: கைதான திமுக MLA மகன், மருமகள் - நீதிபதி அதிரடி உத்தரவு! | Judicial Custody To Mla Son And Sister In Law

பின்னர் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மதிவாணன்-மெர்லினா தம்பதிக்கு வரும் பிப்ரவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.