பிரபல நடிகைக்கு 86 வயதில் மலர்ந்த காதல்..77 வயது நடிகருடன் விரைவில் திருமணம்
இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜூடி டென்ச், உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு இதுவரை 7 முறை நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
1998ஆம் ஆண்டு வெளியான ஷேக்ஸ்பியர் இன் லவ் படத்தில் குயின் எலிசபெத் 1 ஆக நடித்தார் ஜூடி டென்ச்.
இந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார் நடிகை ஜூடி டென்ச். மிஸ்ஸர்ஸ் பிரவுன், சாக்லேட், ஐரிஸ், மிஸ்ஸர்ஸ் ஹெண்டெர்சன் பிரசென்ட்ஸ், நோட்ஸ் ஆன் எ ஸ்கேண்டல், பிலோமீனா ஆகிய படங்களுக்காக ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டார் நடிகை ஜூடி டென்ச்.
நடிகை ஜூடி டென்ச் 6 முறை பிரிட்டிஷ் அகாடமி விருதுகளை பெற்றுள்ளார். BAFTA TV விருது, ஆலிவர் விருது, கோல்டன் குளோப் விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார் ஜூடி டென்ச்.
ஜூடி டென்ச், நடிகர் மைக்கேல் வில்லியம்ஸை கடந்த 1971ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஃபின்டி வில்லியம்ஸ் என்ற மகள் உள்ளார்.
அவர் மூலம் ஜூடிக்கு சாமுவேல் என்ற பேரன் உள்ளார். மைக்கேல் வில்லியம்ஸ் கடந்த 2001ஆம் ஆண்டு காலமானார். கணவர் வில்லியம்ஸ் இறக்கும் வரை சுமார் 30 ஆண்டுகள் நடிகை ஜூடி டென்ச் அவரை பிரியாமல் அவருடனேயே வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கணவர் இறந்து 9 வருடங்கள் கழித்து கடந்த 2010ஆம் ஆண்டு ஜூடி டென்ச்சுக்கு நடிகர் டேவிட் மில்லுடன் காதல் மலர்ந்தது.
கடந்த 11 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். கொரோனா அச்சுறுத்தலின் போது லாக்டவுன் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தனர்.
ஆனால் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவை கைவிட்டுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள நடிகர் டேவிட் மில் “நாங்கள் திருமணத்தை பற்றி பேசினோம், ஆனால் எங்களுக்கு இரண்டு தனித்தனி வீடுகள் இருப்பதால் நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
நாங்கள் ஒன்று அல்லது மற்றொன்றில் இருக்கிறோம், நாங்கள் நான்கு மைல் இடைவெளியில் இருக்கிறோம்.” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக தான் நன்றாக உள்ளதாகவும் கூறியுள்ளார் நடிகர் மில். தொடர்ந்து பேசிய அவர், “ஆரம்பத்தில் இது கொஞ்சம் கடினமாக இருந்தது, ஆனால் நாங்கள் எல்லா இடங்களுக்கும் செல்வோம்.
அது என்னை பிரபலமாக்கியது, ஆனால் நான் அதை நன்றாகக் கண்டேன். நான் அனைத்து ஹாலிவுட் நட்சத்திரங்களையும் சந்தித்தேன், நான் அவர்களுடன் நன்றாகப் பழகினேன்.
நான் நீங்கள் பார்க்கும் நடிகர் அல்ல. நான் அவர்களுக்கு போட்டியாக இல்லை என்று கூறியுள்ளார்.