பேரறிவாளன் விடுதலை ; வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin A. G. Perarivalan
1 மாதம் முன்

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் பெற்று வந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

பேரறிவாளன் விடுதலை ; வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Judgment That Could Go Down In History Mk Stalin

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதி,சட்டம்,அரசியல் நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு.

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது கூட்டாச்சி தத்துவம்,மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக தீர்ப்பு அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை ; வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Judgment That Could Go Down In History Mk Stalin

மனிதாபிமான அடிப்படையில் திமுக அரசு 10 முறை பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது  என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.