பேரறிவாளன் விடுதலை ; வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் பெற்று வந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதி,சட்டம்,அரசியல் நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு.
பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மீண்டும் மீண்டும் வரலாற்றில் நினைவு கூரத்தக்கது கூட்டாச்சி தத்துவம்,மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக தீர்ப்பு அமைந்துள்ளது என கூறியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் திமுக அரசு 10 முறை பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசில் தமிழ்நாடு நிலைநாட்டியுள்ளது!#PerarivalanRelease (3/3)
— M.K.Stalin (@mkstalin) May 18, 2022
LIVE: செய்தியாளர் சந்திப்பு https://t.co/I0KW8kwGi5
— M.K.Stalin (@mkstalin) May 18, 2022