‘‘ஒரு புகார் கொடுக்க கூட நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

judge ramana supremecourt
By Irumporai Aug 06, 2021 09:03 AM GMT
Report

இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கவலை தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி ரமணா தனது கருத்தினை முன் வைத்துள்ளார்.

அதன்படி இந்தியாவில் உள்ள நீதிபதிகள் புகாரளிக்க நசுதந்திரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது துரதிர்ஷடவசமானது என அவர் கூறியுள்ளார்.

மேலும் போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகாரளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.