நீதிமன்றத்திற்கு தினமும் சைக்கிளில் வரும் நீதிபதி.. இப்படியொரு எளிமையான நபரா?
கோவையில் நீதிபதி ஒருவர் நீதிமன்றத்திற்கு சைக்கிளில் வந்து செல்லும் நிகழ்வு பாமர மக்களை வியக்க வைத்துள்ளது.
எளிமையான நீதிபதி
கோவையில் 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுபவர் பி.கே. சிவகுமார். 53 வயதாகும் இவர் நாமக்கலை சொந்த ஊராக கொண்டுள்ளார்.
சேலம், கோவை, மேட்டுப்பாளையம், புதுக்கோட்டை உட்பட பல இடங்களில் மாஜிஸ்திரேட் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் பணி செய்துள்ளார்.
எளிமை, நேர்மைக்கு மறுரூபமாக இருக்கும் இவர், கீழ் கோர்ட்டுகளில் நீதிபதியாக இருந்த போதே நீதிமன்றத்திற்கு சைக்கில் வந்து செல்வது வழக்கமாக வைத்துள்ளாராம்.
சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு கிடைத்து, கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த பின்பும் தனது செயலில் எந்தவொரு மாற்றம் இல்லாமல் சைக்கிளிலேயே பயணித்து வருகின்றார்.

ஊழியர்களுடன் மதிய உணவு
தினமும் வீட்டிலிருந்து சைக்கிளில் நீதிமன்றத்திற்கு வருவதுடன், மதிய உணவையும் கையில் எடுத்து வந்துவிடுகின்றார். மதிய உணவு வேளையில் கூட நீதிபதிகளுக்கான அறையில் அமர்ந்து சாப்பிடுவதில்லையாம்.
நீதிமன்ற ஊழியர்களுடன் தான் சேர்ந்து சாப்பிடுகின்றார்.மேலும் நீதிமன்ற வளாகத்தில் தன்னுடன் டவாலி வருவதையும் தவிர்த்து தனியாகவே நடந்து செல்கின்றார்.
இப்படி, நீதிமன்றத்திற்கு சைக்கிளில் வந்து செல்லும் நீதிபதி பி.கே.சிவகுமார் பற்றி கேள்விப்பட்டவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil