நித்தியானந்தா தலைமறைவாக இருந்து இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் - நீதிபதி காட்டம்

India Nithyananda Madras High Court
By Karthikraja Oct 23, 2024 10:00 AM GMT
Report

நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை அவரது சொத்துக்களை பாதுக்காக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நித்தியானந்தா சீடர்

நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் ஒன்றை தாக்கல் தொடர்ந்தார். 

நித்தியானந்தா

இந்த மனுவில் "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக என் மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீதும் விருதுநகர் மாவட்டம் சேத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நித்தியானந்தா நேரில் வர வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

நித்தியானந்தா நேரில் வர வேண்டும் - நீதிமன்றம் அதிரடி

ஜாமீனுக்கு எதிர்ப்பு

எங்கள் மீது பொய்யான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த ஜாமீன் மனு நேற்று நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது.

madurai high court

நில உரிமையாளர் கணேசன், "தான் ஏற்கனவே நித்தியானந்தா வழக்கில் அரசு தரப்புச் சாட்சியாக உள்ளேன். இந்த வழக்கு மைசூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நித்தியானந்தாவின் சீடர்கள் தன்னை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது" என தனது வாதத்தை முன் வைத்தார்.

சவால் விடும் நித்தியானந்தா

இதன் பின் பேசிய நீதிபதி, நித்தியானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு, இந்திய நீதித் துறைக்கே சவால் விட்டு வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. அவர் நீதி மன்றத்தில் ஆஜராவதில்லை. ஆனால், அவரது சொத்துகளை நீதித்துறைப் பாதுகாக்க வேண்டுமா?

மனுதாரர் வழக்கறிஞராக இருப்பதால், சம்பந்தப்பட்ட நில விவகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்தால், முன் ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்” என உத்தரவிட்டார்