சுயமரியாதையெல்லாம் விட முடியாது - நீதிமன்றத்திலேயே ராஜினாமா செய்த நீதிபதி!
நீதிபதி ஒருவர் திடீரென கோர்ட்டில் பதவியை ராஜினாமா செய்தார்.
சுயமரியாதை
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் ரோஹித் பி தேவ். 2017ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கிறார்.
இந்நிலையில், திடீரென கோர்ட்டில் நீதிபதி ரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்தார். மேலும், தனது சுயமரியாதைக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது. ஆனாலும் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால்,
நீதிபதி ராஜினாமா
அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கோர்ட்டில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், வழக்கறிஞர்களிடம் சில நேரம் கடுமையாக நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நக்சலைட்களுடன் தொடர்புடையவராக கருதப்படும் பேராசிரியர் சாய்பாபா மற்றும் ஐந்து பேருக்கு விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனையை ரத்துசெய்து உத்தரவிட்டார். தீர்ப்பு வெளியானவுடன் தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு வழக்கை புதிதாக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.