குஷ்பு, காயத்ரியிடம் மன்னிப்பு கேட்க சொன்ன நீதிமன்றம் : திமுக பேச்சாளருக்கு உத்தரவு

DMK BJP
By Irumporai Nov 26, 2022 05:27 AM GMT
Report

திமுக பேச்சாளர் சைதை சாதிக் கடந்த மாதம் சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் பேசிய போது.

சாதிக் சர்ச்சை பேச்சு

பாஜக நிர்வாகிகளும் நடிகைகளும் ஆன குஷ்பூ, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் பற்றி அவதூறான கருத்துக்களை மிகவும் ஆபாசமாக பேசினார் .

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன , திமுகவை சேர்ந்த கனிமொழி எம்பி அவர்களும் இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டார்.

குஷ்பு, காயத்ரியிடம் மன்னிப்பு கேட்க சொன்ன நீதிமன்றம் : திமுக பேச்சாளருக்கு உத்தரவு | Judge Orders Dmk Speaker To Apologize

பாஜக வழக்கு

இதன் பிறகு பாஜக சைதை சாதிக் மீது வழக்கு தொடர்ந்து போரட்டங்கள் நடத்திய நிலையில் சைதை சாதிக் மீது காவலதுறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டிருந்தார் சைதை சாதிக். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி உத்தரவு

அப்போது இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி பெண்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை பேசியிருக்கிறார். அதனால் இனிமேல் இதுபோல் பேச மாட்டேன் என்று அவர் பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நீதிபதி மேலும் சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் சைதை சாதிக் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரைக்கும் சைதை சாதிக்கை போலீசார் கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.