அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா வழக்கில் இன்று தீர்ப்பு!

surapaacase judgekalaiyarsan
By Irumporai Feb 11, 2022 04:28 AM GMT
Report

நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடுத்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா தனது பணி காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்து சூரப்பாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு உத்தரவிட்டது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்  சூரப்பா வழக்கில் இன்று தீர்ப்பு! | Judge Kalaiyarasans Today In The Surappa Case

அதன்படி இந்த ஆணையம் சூரப்பாக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரித்தபோது அதில் முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தது. இந்த விவகாரத்தில் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.  

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா தொடர்ந்த வழக்கில் நீதிபதி பார்த்திபன் இன்று தீர்ப்பளிக்கிறார் . இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி கலையரசன் ஆணையத்தை எதிர்த்து தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.