பகலில் நீதிபதி : இரவில் ஆபாச நடிகர்.. இரட்டை வேட இளைஞன் மன்மத லீலை !
அமெரிக்க ஒன்லி பேன்ஸ் என்ற உள்ளூர் சேனலில் ஆபாச நடிகராக நடித்த நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டார் .
இரட்டை வேட நீதிபதி
நியூயார்க் நிதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருபவர் 33 வயதான கிரிகோரி ஏ .லாக். இவர் பகலில் நீதிபதியாகவும் இரவில் ஆபாச நடிகராகவும் இருந்துள்ளார் .
தனது ஒன்லி பேன்ஸ் என்ற உள்ளூர் சேனலில் ரசிகர்களிடம் மாத சந்தாவாக $12 இந்திய ரூபாய் மதிப்பு படி 987 ரூபாய் வசூலித்து . அதில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிட்டு தானும் ஆபாசமாக நடித்துள்ளார் .
இந்த நிலையில் கிரிகோரி சமூக வலைத்தளங்களில் 'நான் ஒரு நீதிபதி' என்றும் ,காலையில் நீதி துறையில் பணிபுரிகிறேன் இரவில் தொழில்சார்ந்தவற்றில் ஆர்வம் செலுத்துகிறேன் என்றும் கூறியிருக்கிறார் .மேலும் 'முதிர்ச்சியற்றவர், முரட்டுத்தனமானவன், ஆபாசமானவன் ' போன்ற தலைப்புகளை பதிவிட்டுள்ளார் .
இவரின் பதிவுகள் மீதான சந்தேக விசாரனையில் இவரது உண்மை முகம் வெளிஉலகத்திற்கு தெரியவந்துள்ளது . தற்போது நீதிபதி பதிவில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நகர கவுன்சில் எதிர்ப்பு
இந்நிலையில் நியூயார்க் நகர கவுன்சில் பெண் விக்கி பலடினோ கூறுகையில் நீதி துறையில் உள்ள நபர் ஆபாசமாக நடித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் .இந்த நகரம் தனது அனைத்து செயல்பாடுகளில் நீதிமன்றங்களை முழுமையாக நம்பி இருக்கிறது .
அத்தகைய நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் லாக் போன்ற நபர்களின் செயல்பாடுகள் உள்ளது என்றும் . இது போன்ற செயல்பாடுகள் நீதித்துறையின் மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பக தன்மையை இழக்க செய்கிறது என்றார் .லாக் போன்ற நபர்களை சட்ட அதிகார பதவிகளில் இருந்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது .