தமிழர்கள் தைரியம் இல்லாதவர்கள் : சுப்பிரமணியன் சுவாமி பேச்சு

BJP
By Irumporai 2 மாதங்கள் முன்

 அடுத்த சட்டசபையில் ஒரு மாற்றுக் கட்சியாக பாஜக வரும் என மதுரையில் நடைபெற்ற விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசினர்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக் கட்டடத்தில் வைத்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமியின் 83வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்தி பேசினர்.

மூன்று ஆண்டுகளில் பெரிய மாற்றம்

இதையடுத்து, மேடையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிச் சென்றோம்.

தற்போது அதிலிருந்து மீண்டு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்பர் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தோம்.

அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர். பாரத மாதா நம்பர் ஒன் என்று மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது

பெரியாரும் கோவிலும்

பெரியார் என்று அழைக்கப்படும் ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் அவருடைய அப்பா கோயில் கட்டி கொடுத்து கோயிலை தனது மகன் ராமசாமி நாயக்கர் பராமரிப்பார் என்று உயில் எழுதி வைத்தார். அதன்படி கோயிலை முறையாக பராமரித்ததற்காக 25 ஆண்டுகள் தொடர்ந்து முதல் பரிசை பெற்றுள்ளார்.

நமது கோவிலைஇது கி.வீரமணிக்கு தெரியுமா?. அவர் எங்கே இருக்கிறார் ஓடிப் போய்விட்டார். கோயில்களில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என போடப்பட்டது. வெள்ளைக்காரன் கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில்தான். நமது சட்டப்படி எந்த கோவிலையும் அரசு எடுத்துக் கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தமிழர்கள் தைரியம் இல்லாதவர்கள் : சுப்பிரமணியன் சுவாமி பேச்சு | Jp Will Be An Alternative Party Subramanian Swamy

தமிழ்நாட்டில் உள்ள 32 ஆயிரம் கோயில் திமுக அரசு கையில் இருப்பதை விடுதலை செய்ய வேண்டும். கோயிலை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும். ஆனால், எல்லா கோயிலையும் கையில் எடுத்து அர்ச்சகர்களை நியமிக்கிறார்கள். எல்லா கோயிலையும் மீட்டெடுத்து பூசாரி கையில் கொடுப்பேன் என்றார்.

மேலும், ஹிந்துவில் எந்த வேறுபாடும் கிடையாது எனவும் பிரமணர்களின் DNAவும் தாழ்த்தப்பட்டவர்களின் DNAவும் ஒன்று தான், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் கூட ஒரே DNA தான் ஏனென்றால் அவர்கள் இங்கிருந்து மதம் மாறிவர்கள் மட்டுமே என கூறினார்.

ஆனால் தமிழர்களுக்கு தவறாக கற்று கொடுக்கப்படுகிறது. தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால் தைரியம் இல்லாதவர்கள். எனவே ஒரு புதிய தமிழனை உருவாக்க வேண்டும் என கூறினார்.