காங்கிரஸ் என்றால் வெட்கக்கேடு...கடுமையாக விமர்சித்த பாஜக..!!
இந்தியா பெயர் மாற்றமா குறித்தான சர்ச்சைகள் அதிகளவில் எழுந்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா பெயர் சர்ச்சை
இந்தியா நாட்டின் பெயர் "பாரத்" என மாறப்போவதாக நேற்றைய தினம் முதல் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஜி 20 மாநாட்டின் அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்றில்லாமல், பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முதல் இந்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ், திமுக கட்சியின் முக்கிய தலைவர்கள் இது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக கட்சியினரும் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஜே.பி.நட்டா விமர்சனம்
இந்நிலையில், தற்போது பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில் "இந்தியாவின் முன்னுரையைக் கூட அறியாத ஒரு கட்சியிடம் நாம் எதையும் எதிர்பார்க்க முடியும் என பதிவிட்டு, காங்கிரஸ் = அரசியலமைப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் மீது மரியாதை இல்லாதது. வெட்கக்கேடானது!" என்று விமர்சனம் செய்துள்ளார்.
Can we expect anything from a party which does not even know India's Preamble....
— Jagat Prakash Nadda (@JPNadda) September 5, 2023
Congress = Lack of respect for Constitution and Dr. Ambedkar.
Shameful! pic.twitter.com/iKo3Gh1MNu