அதிமுக - பாஜக மோதல்.. இதெல்லாம் நமக்கு தேவையில்லை : கண்டீஷன் போட்ட ஜே.பி.நட்டா

ADMK BJP
By Irumporai Mar 14, 2023 06:13 AM GMT
Report

தமிழகத்தில் அ .தி .மு .க.வுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் யாரும் விமர்சித்து  பேசக்கூடாது என பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா அறிவுறுதியுள்ளார்.

அ .தி .மு .க  - பா .ஜ .க  மோதல் 

கடந்த சில வாரங்களாக அதிமுக மற்றும் தமிழக பாஜக இடையே பனிப்போர் நிலவி வருகின்றது என்றே கூறலாம், தமிழக பா.ஜ க .வில்  மாநில தகவல் தொழில்நுட்ப செயலராக இருந்த நிர்மல்குமார் சமீபத்தில்  அ.தி .மு .க வில் இணைந்தார் .அவரை தொடர்ந்து பா.ஜ .க நிர்வாகிகள் சிலரும் அ .தி .மு .க. வில்   இணைந்தார்கள் .

அதிமுக - பாஜக மோதல்.. இதெல்லாம் நமக்கு தேவையில்லை : கண்டீஷன் போட்ட ஜே.பி.நட்டா | Jp Nadda Urges Bjp Not Criticize Aiadmk

  அண்ணாமலை  விமர்சனம் 

இதையடுத்து பா.ஜ .க . நிர்வாகிகளை வலுகட்டாயமாக அழைத்து கட்சி நடத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி தலைவர்  கே .அண்ணாமலை  விமர்சித்தார் ,  மேலும் தான் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போல தலைவர் என்று கூறினார், அண்ணாமலையின் இந்த கருத்து அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில் பா.ஜ .க தேசிய தலைவர் ஜே.பி .நட்டா கடந்த 10-ம் தேதி  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்சியில்  பங்கேற்க  வந்தார் அப்போது அவர் ,தமிழக பா.ஜ .க  நிர்வகிகளுடன்  தனியாக ஆலேசனை நடத்தினர்.

அடவைஸ் கொடுத்த நட்டா

அ .தி. மு .வுடன் நாம் சுமுக உறவை வைத்துக்கொள்ள வேண்டும், அ .தி .மு .க .தலைமை குறித்தோ ,தொண்டர்களை குறித்து  யாரும்  எந்தவித குறையும் சொல்ல வேண்டாம் ,இதனனை தமிழக பா.ஜ .க  நிர்வகிகள் ,தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார் .இதனை  யாரும் மீறி நடக்கக்கூடாது என அறிவுரை வழங்கியதாக கூறப்படுகின்றது.

அ .தி. மு .வுடன் நாம் சுமுக உறவை வைத்துக்கொள்ள வேண்டும், அ .தி .மு .க .தலைமை குறித்தோ ,தொண்டர்களை குறித்து  யாரும்  எந்தவித குறையும் சொல்ல வேண்டாம் ,இதனனை தமிழக பா.ஜ .க  நிர்வகிகள் ,தொண்டர்கள் பின்பற்ற வேண்டும் எனக்கூறியுள்ளார் .இதனை  யாரும் மீறி நடக்கக்கூடாது