1 பைசாவில் தாய்மாமன் தங்க மோதிரம் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ் - சந்தேகம் கிளப்பும் அதிமுக

Vijay ADMK Gold
By Karthikraja Aug 21, 2026 02:04 PM GMT
Report

joyalukkas 1paisa tender for thaimaman thanga modhiram scheme: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட ஒப்பந்தம் பெற ஜாய் ஆலுக்காஸ் 1 பைசாவிற்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் அதிமுக சந்தேகம் எழுப்பியுள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துவக்கி வைக்க உள்ளார். 

1 பைசாவில் தாய்மாமன் தங்க மோதிரம் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ் - சந்தேகம் கிளப்பும் அதிமுக | Joyalukkas 1Paisa Tender To Thanga Modhiram Scheme

இதன்படி, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சார்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

1 பைசாவில் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ்

மேலும், முதற்கட்டமாக 4,41,667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த தங்க மோதிரங்கள் 22 காரட் தூய்மையுடனும், 916 தரச்சான்றிதழ் கட்டாயம் இருக்கவேண்டும் என டெண்டரில் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக டெண்டர் கோரிய நிறுவனங்களின் பட்டியல் வெளியானதில், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தங்க விலை தவிர்த்து, செய்கூலி, சேதாரம், ஹால்மார்க் முத்திரை, பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து என அனைத்துக்கும் சேவைக் கட்டணமாக 1 பைசா வழங்கினால் போதும் என விண்ணப்பித்துள்ளது. 

1 பைசாவில் தாய்மாமன் தங்க மோதிரம் ஒப்பந்தம் கோரிய ஜாய் ஆலுக்காஸ் - சந்தேகம் கிளப்பும் அதிமுக | Joyalukkas 1Paisa Tender To Thanga Modhiram Scheme

இதனால் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தேகம் கிளப்பும் அதிமுக

இந்த விவகாரம் குறித்து சந்தேகம் எழுப்பும் விதமாக அதிமுகவின் ஐடி விங் பதிவு வெளியிட்டுள்ளது.

இந்த பதிவில், "தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.

அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா? நம்ம ப்ரோ @actorvijay தான்!

மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை.

தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே? ஆவன செய்வீர்களா முதல்வர்?" என தெரிவித்துள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening