என் மடியில்தான் சாவேனு சொன்னாரு.. கொந்தளித்த ஜாய்!
என்னை கடனாளியாக்கியது மாதம்பட்டி ரங்கராஜ்தான் என ஜாய் குற்றம்சாட்டியுள்ளார்.
ரங்கராஜ் மெசேஜஸ்
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது.

கடந்த 3 மாதங்களாக கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷன் என நான் அலைந்து திரிந்ததால் டாக்டர் என்னை அவ்வளவு திட்டினார்கள். என் மீது மாதம்பட்டி ரங்கராஜ் அத்தனை வழக்குகளை போட்டார். நான் ஒன்று கேட்கிறேன், ஏன் மாதம்பட்டி ரங்கராஜனால்,
டிஎன்ஏ டெஸ்ட் எடுங்கள் என கேட்டு நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்க முடியலை? ஒரு பொன்னான நானே தற்போது இந்த உரிமைக்காக போராடும் போது அவர் ஏன் போராட மறுக்கிறார். மகளிர் ஆணையத்தில் "எனது குடும்பத்தின் மிரட்டலால்தான் நான் ஜாயை கவனிக்க முடியவில்லை என சொன்னார்.
வெளியே வந்ததும் நான் மிரட்டுவதாக சொல்கிறார், இதில் எந்த மாதம்பட்டி ரங்கராஜ் உண்மையானவர் என எனக்கு புரியவில்லை. அவர் என்ன சின்ன குழந்தையா, நான் மிரட்டி திருமணம் செய்யறதுக்கு? நான் எத்தனை புகைப்படங்களை போட்டுள்ளேன்.
கொதித்த ஜாய்
அதில் ஒன்றிலாவது நான் அவரை மிரட்டி பணிய வைத்தது போன்றா இருந்தது? மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய நிறைய மெசேஜ்கள் என்னிடம் இருக்கிறது. என் மடியில்தான் சாவேன் என்றெல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார். 12 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு நல்ல துணை கிடைத்ததாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

நான் காசுக்காக அப்படி செய்கிறேன் என்றால் அவருடைய வங்கி ஸ்டேட்மென்ட்டை காட்ட சொல்லுங்கள், அவர் எனக்காக எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என்பது தெரியும். என்னிடம் இரு நல்ல கார்களை வைத்திருந்தேன். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ்தான் அந்த கார்களை விற்றுவிட்டு எனக்கு பிஎம்டபிள்யூ கார் வாங்கிக் கொடுத்தார்.
அதற்கு அவரே இஎம்ஐ கட்டுவதாகவும் சொன்னார். நான் கேட்கவே இல்லையே. நான்தான் இஎம்ஐ கட்டுவேன் தங்கம், நான்தானே உன் புருஷன்" என்றெல்லாம் சொல்லி அவர்தான் இஎம்ஐ கட்டினார். காசுக்காக நான் அலைவதாக இருந்தால் எப்பவோ காசை வாங்கிக் கொண்டு போயிருப்பேன்.
எதற்காக நான் கோர்ட், கேஸுனு அலையணும்? என் குழந்தைக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன். மகளிர் ஆணையத்தில் நான் பேசியதெல்லாம் தவறு என்கிறாரே, அங்கு ரெக்கார்ட்ஸ் இருக்கு. என் குழந்தையின் கண்ணீர் மாதம்பட்டி ரங்கராஜை சும்மா விடாது.
நான் அவரை நன்றாக பார்த்துக் கொண்டதாக மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தார். டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என நான்தான் மகளிர் ஆணையத்தில் கேட்டேன். அப்போது ரங்கராஜ், டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம், இது எனது குழந்தைதான் என்றார் என தெரிவித்துள்ளார்.