என் மகள் ஜோவிகா அந்த 2 டாப் நடிகைகள் அளவுக்கு வருவா - நடிகை வனிதா நம்பிக்கை!
எதிர்காலத்தில் த்ரிஷா, நயன்தாரா மாதிரி பெரிய ஆர்டிஸ்டாக வருவதற்கு அவளுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.
பிக்பாஸ் ஜோவிகா
பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா பிக்பாஸ் தமிழ் சீசன் 7னில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அதில், தனக்கு படிப்பு வரவில்லை என்பதால் 9ம் வகுப்போடு நின்றுவிட்டேன் என அவர் பேசியது பெரும் விவாதப்பொருளானது.
மேலும், அண்மையில் அவர், ஜோவிகா என்றும் தனது பெயரை தமிழில் 'ஜேபவிகா' என எழுதியிருந்தார். இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும், “இதுக்குதான் படிக்கணும் சொல்றாங்க” என கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர்.
வனிதா விஜயகுமார்
இந்நிலையில் ஜோவிகாவின் தாயார் வனிதா நேர்காணல் ஒன்றில் பேசியதாவது "ஜோவிகாவிற்கு இப்போது 18 வயது தான் ஆகிறது. இன்னும் இண்டஸ்ட்ரியில் அவள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு.
ஏற்கெனவே அவ நிறைய பேரோட அன்பை சம்பாதிச்சு இருக்கா. இப்பவே அவ சம்பாதிச்சுக்கிட்டு தான் இருக்கா. குறைந்தபட்சம் இன்னும் 20 வருஷத்துக்கு அவளால் சம்பாதிக்க முடியும்.
அவளுக்கு வெளில நிறைய வேலை இருக்கு. எதிர்காலத்தில் த்ரிஷா, நயன்தாரா மாதிரி பெரிய ஆர்டிஸ்டாக வருவதற்கு அவளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த ஷோக்காக அவளோட வாழ்க்கையை கெடுத்துக்க முடியாது" என்று பேசியுள்ளார்.