ரஜினி பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய கஸ்தூரி ராஜா; தனுஷ் விவாகரத்து காரணம் - பிரபலம்!
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகறதுக்கு லதா ரஜினிகாந்த் தான் காரணம் என்று பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள்.அதனைத் தொடர்ந்து,
ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். ஆனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அண்மையில் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், மேலும் சில அதிர்ச்சி தகவலை கொடுத்துள்ளார் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன். இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி தான் இப்போது வைரலாகி வருகிறது.
அதாவது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்குள் கருத்து வேறுபாடு வர காரணமாக அமைந்ததே நானும் ரவுடி தான் படம் தான். தனுஷ் தனக்கு பட வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் குறைவான பட்ஜெட் படங்களை தயாரித்து வந்தார்.
அப்படித் தான் 6 கோடி பட்ஜெட்டுடன் வந்த விக்னேஷ் சிவனுக்கு நானும் ரவுடி தான் படத்தை தயாரிக்க முன்வந்தார். ஆனால், படம் 16 கோடி ரூபாய் வரை செலவை இழுத்து விட்டதால், தனுஷ் இதற்காக கடன் வாங்கியுள்ளார்.
பத்திரிக்கையாளர்
விநியோகத்திலும் இந்தப் படம் இழப்பை தந்ததால் அவர் வீட்டில் பிரச்சனை வந்துள்ளது. அத்துடன், தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா அவரது படத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அதுவும் ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது.
இப்படி, தனுஷூம் அவரது அப்பாவும் வாங்கும் கடனுக்கு ரஜினி பொருப்பாக மாறக் கூடாது என லதா ரஜினிகாந்த் நினைத்தாராம்.இதனால், அவரது சொந்த பந்தங்களிடம் இதுபற்றி எடுத்துக் கூறியபோது
அனைவரும் தனுஷிடமிருந்து ஐஸ்வர்யாவை பிரித்தால் தான் இதெல்லாம் சரியாக வரும் என அறிவுறுத்தினராம். இதனால், தனுஷை நம்பி இருந்தால், உன்னுடைய எதிர்காலமும்,
பிள்ளையின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிவிடும் எனக்க கூறி ஐஸ்வர்யாவின் மனதை லதா மாற்றியுள்ளாராம்.அத்துடன் நில்லாமல், கடன்காரர்களின் தொல்லையால், ரஜனிகாந்த் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தை
ஒதுக்கியே வைத்திருந்தார் எனக் கூறுகிறார். இப்போது இருவரும் சட்டப்பூர்வமாக பிரிந்ததால், ரஜினியின் சொத்துகள் நேரடியாக அவரது மகளுக்கும் பேரன்களுக்கும் சென்றுவிடும் என ரஜினி குடும்பம் நிம்மதி அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.