கழுத்தளவு சென்ற வெள்ளத்தில் நின்று நேரலை செய்த செய்தியாளர்..!

Pakistan
By Thahir Aug 30, 2022 10:05 AM GMT
Report

பாகிஸ்தானில் கழுத்தளவு சென்ற வெள்ள நீரில் தனது உயிரை பணயம் வைத்து நேரலை செய்த செய்தியாளரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெள்ளத்தில் இறங்கி செய்தி கொடுத்த நிருபர் 

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் இலர்லாத அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இதனால் சுமார் 9 லட்சம் வீடுகள் மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.

இதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக காய்கறி மற்றும் பழங்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கழுத்தளவு சென்ற வெள்ளத்தில் நின்று நேரலை செய்த செய்தியாளர்..! | Journalist Stood In Neck Deep Flood Live Broadcast

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் அங்கு நிலவும் சூழலை வெளிகாட்டும் விதமாக அவரே வெள்ளத்தில் இறங்கி மைக்கை கையில் பிடித்து கொண்டு நேரலை செய்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.