புகைப்படங்கள் மூலம் உண்மைபேசிய பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் தாலிபன்களால் கொலை!

killed afghanistan danishsiddiqu
By Irumporai Jul 16, 2021 09:35 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இந்தியாவில் கொரோனாவின்  கொரதாண்டவத்தை புகைப்படம் மூலம் உலகறிய செய்த புகைப்பட நிருபர் தானிஷ் சித்திக் காலமானர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், ராய்ட்டர்ஸ் என்ற பத்திரிக்கையில் புகைப்பட நிருபராக பணியாற்றி வருபவர் தானிஷ் சித்திக்.

இவர், இந்தியாவில் கொரோனா வைரஸின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்தவர் என்ற பெருமையை பெற்றவர்.

உத்தர பிரதேசத்தின் கங்கை நதியில் அருகே சடலங்கள் கொத்துகொத்தாக எரிக்கப்படுவதை கழுகு பார்வையில் இருந்து இவர் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவின் மோசமான நிலையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டியது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் ஆப்கான் படைகளுக்கு இடையே நிலவும் மோதல் குறித்த படப்பிடிப்புக்காக அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஆப்கான் மக்கள் யுத்தத்தினால் படும் கஷ்டங்கள் குறித்து தான் பணிபுரியும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு செய்தி அனுப்பி வந்தார்

இந்த நிலையில்  ஆப்கான் படைகளுடன்  கந்தகாரில் ஏற்பட்ட மோதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.

இவரது மரணம் குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட நிருபர் 

  டேனிஷ் சித்தக் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.