பிரதமர் மோடி எங்கே? - ஜோதிமணி எம்.பி., சரமாரி கேள்வி

PM Modi mk stalin Jothimani MP
By Petchi Avudaiappan May 30, 2021 11:10 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

நெருக்கடியான கொரோனா தொற்று காலத்தில் பிரதமர் மோடி எங்கே இருக்கிறார்? என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, "நெருக்கடியான கொரோனா தொற்று காலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் GobackStalin என்று ட்ரெண்ட் செய்யும் பாஜகவினரே... இதோ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே. பிரதமர் நரேந்திர மோடி எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.