‘’ அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் ஊழல் செய்யும் அதிகாரிகள் உள்ளார்கள்’’ - தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்திய எம்.பி ஜோதிமணி

கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குவது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட ஆட்சியருக்கு ஜோதிமணி பலமுறை வலியுறுத்தியும் முகாம்களை நடத்தாத ஆட்சியரை கண்டித்து எம்.பி ஜோதிமணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான  முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில்,கரூர் மாவட்டத்தில் இந்த முகாம்கள் நடத்தாத காரணத்தால்.திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியாத நிலை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி யிடம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தரையில் அமர்ந்து மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார், மேலும், அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்