கல்யாணத்தப்போ இதுக்கு ரொம்ப பயந்தேன்..! ஓப்பனாக சொன்ன ஜோதிகா

Suriya Jyothika
By Karthick Dec 27, 2023 02:53 PM GMT
Report

நடிகர் சூர்யாவுடனான திருமணம் குறித்து ஜோதிகா பேட்டி ஒன்றில் மனந்திறந்து பேசியுள்ளார்.

சூர்யா - ஜோதிகா

தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திர ஜோடிகள் என்றால் சூர்யா ஜோதிகா என்று கூறலாம். கேரியரின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் 2006-ஆம் ஆண்டு ஜோதிகா சூர்யாவை கரம்பிடித்தார்.

jothika-about-her-marriage-with-suriya

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜோதிகா, அண்மையில் மம்முட்டியின் ஜோடியாக காதல் தி கோர் படத்தில் நடித்திருந்தார். படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

பயம் தான்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.வடநாட்டில் பிறந்த நீங்கள் தமிழ்நாட்டில் மருமகளாக வந்தது உங்களுக்கு சவாலாக இருந்ததா? பயமாக இருந்ததா? கவலையை தந்ததா? என்ற கேள்வி ஜோதிகாவிடம் கேட்கப்பட்டது.

jothika-about-her-marriage-with-suriya

அதற்கு சட்டென பதிலளித்த ஜோதிகா, பயமாக தான் இருந்தது என கூறினார். எல்லா பெண்களுக்கும் பொதுவாக திருமணம் என்றால் ஒரு பயம் வரும். அது போன்ற பயம் தான் தனக்கும் ஏற்பட்டது என்று கூறினார் ஜோதிகா.

கிரிக்கெட்டில் கால்பதிக்கும் சூர்யா - சென்னை அணியை வாங்கினார்..!!

கிரிக்கெட்டில் கால்பதிக்கும் சூர்யா - சென்னை அணியை வாங்கினார்..!!

வேறு எந்த பயமும் ஏற்படவில்லை என்ற அவர், இது தான் என் வீடு என்று நினைத்து தான் உள்ளே சென்றேன் என்றும் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.