சுடுகாட்டுக்குக் கூட வரி...நாடாளுமன்றத்தில் எம்.பி. ஜோதிமணியின் காரசார உரை - வைரலாகும் வீடியோ

India
By Nandhini Aug 03, 2022 08:49 AM GMT
Report

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி முதல் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆகஸ்டு மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அரிசி, கோதுமை, தயிர் விலை உயர்வு

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துள்ளது. இதனால், 25 கிலோ அரிசி மூட்டை 100 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இடைநீக்கம்

கடந்த ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி-க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் உள்ளிட்டோர் காஸ் விலை உயர்வு குறித்த போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் விதிமுறைகளை மீறி, இடையூறு விளைவித்ததற்காக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 எம்.பி-க்களையும், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கக் கூடாது எனக் கூறி இடைநீக்கம் செய்தார்.

கடும் நடவடிக்கை

காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்திரி அளித்த உறுதிமொழியை ஏற்று மக்களவை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப் பெறுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

மேலும், மக்களவையில் பதாகைகளை ஏந்தி வரக்கூடாது என்றும், அவையின் உள்ளே மீண்டும் பதாகைகள் காட்டப்பட்டால் விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

Jothimani

வைரலாகும் வீடியோ

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் விலைவாசி-ஜிஎஸ்டி உயர்வு குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பேசினார். பாலுக்கு வரி, அரிசி, பருப்புக்கு வரி, மருத்துவமனை அறைகள், சுடுகாட்டுக்குக் கூட வரி. உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? என்று நேற்று நாடாளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதத்தில் உரை நிகழ்த்தினார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவைலத்தளங்களில் வைரலாகி வருகிறது.