தோனியால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதா? - உண்மையை சொன்ன கேப்டன் பின்ச்
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது எப்படி என அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று முன்தினம் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஹேசில்வுட் , ஆடம் ஸம்பா இருவர் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீச, ஸ்டார் பவுலரான ஸ்டார்க் பந்துவீச்சை வில்லியம்சன் அடித்து நொறுக்கினார்.
குறிப்பாக ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இந்நிலையில் ஹேசில்வுட் பற்றி புகழ்ந்து கூறிய ஆரோன் பின்ச் எங்களின் பந்துவீச்சுக் குழுவில் ஹேசில்வுட் முக்கியமான நபர். சென்னை அணியில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எல்லாம் எங்களிடம் ஹேசில்வுட் பகிர்ந்துகொண்டார்.
அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம் என்பதை உணர்ந்து லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது என்பதை எங்களிடம் ஹேசில்வுட் பகிர்ந்துகொண்டார். உண்மையில் ஹேசில்வுட் பந்துவீச்சை அடிப்பது ஆட்டத்தில் கடினமாகத்தான் இருந்தது. ஐபிஎல் தொடரில் ஹேசில்வுட் சிறப்பாகச் செயல்பட்டது எங்களுக்கு உலகக் கோப்பை போட்டியில் உதவியது.
இதனைக்கண்ட ரசிகர்கள் ஹேசில்வுட் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீச நிச்சயம் கேப்டன் தோனி ஆலோசனை தான் காரணம் என்றும், உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதற்கு தோனியும் ஒரு காரணம் எனவும் புகழ்ந்து வருகின்றனர்.